கிராம சபை பற்றிய தகவல்கள்

கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் 






கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன? 
நாம் என்னென்ன செய்ய வேண்டும் ?

சட்டசபைக்கு இணையான வலிமை கிராம சபைக்கு உண்டு

  1. சமீப காலங்களாக பெருகி வரும் திருட்டை தடுக்க அனைத்து தெருக்களிலும் CCTV காமெராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
  2. பஞ்சாயத்து தலைவர் ஆகவேண்டும் என நினைப்பவர்களை  கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
  3.  அரசியல் ஆசை உள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
  4.  Ex பஞ்சாயத்து உபதலைவரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
  5.  Ex வார்டு மெம்பரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
  6.  கிராமசபை கூட்டத்துக்கு வரும் தலைவருக்கு மட்டும்   தேர்தலின்போது ஓட்டு போடுங்கள்.
  7.  நம் கிராமம் மீது அக்கறை இல்லாமல் கிராமசபை  கூட்டத்துக்கு  வராத தலைவர்களுக்கு தேர்தலின்போது ஓட்டு போடாதீர்கள்.
  8.  50 நபருக்கு குறைவாக இருந்தால் கிராமசபை கூட்டத்தை நிறுத்துங்கள்.
  9.  501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவியுங்கள். 2011 கணக்கெடுப்பின் படி நம் மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தின் மக்கள் தொகை 12,448.
  10. நம் கிராமத்தில் கிராமசபை அரசாணைப் படி 100க்கு குறைவான நபர்கள் இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மறு தேதிக்கு மாற்றலாம்.
  11. கடந்த ஆகஸ்ட் 15 2018 அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 54 பேர் மட்டுமே, அதிலும் பெரும்பாலானோர் தங்கள் சொந்த பெயரை கூட எழுத தெரியாத படிப்பறிவு இல்லாத துப்புறவு  தொழிலாளர்கள். 
  12. கடந்த மே 1 2018 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் எத்துணை பேர் கலந்து கொண்டனர் என்று கிழே பாருங்கள். வெறும் 13 பேர் மட்டுமே. ஆனால் நமது ஊராட்சி மக்கள் தொகை 12,448 என்பதால் குறைந்தது 300 மக்கள் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது சட்ட விதி.
             

நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம்
கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம்

  1. கிராமசபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை உங்கள் கிராமத்திற்கு வரவைக்கலாம்.
  2.  கிராமசபை கூட்டத்துக்கு செல்லும் முன் ஆன்லைனில் வரவு செலவு விபரங்களை டவுன்லோடு செய்யுங்கள்.
  3.  ஓட்டுப்போடுவதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது கிராமசபை.
  4. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை  அழிக்க துணை போகாதிருங்கள்.
  5. மழை நீர் சேகரிப்பு வசதி குறித்து  கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றுங்கள்.
  6. கிராமசபையில் சாக்கடை கால்வாய் அல்லது உறிஞ்சி குழாய் அமைப்பது குறித்து தீர்மானம் இயற்றுங்கள்.
  7. குப்பை (திடக்கழிவு)மேலாண்மை குறித்து தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
  8. கிராமசபையில், தனியாரின் விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைப்பது குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் இயற்றுங்கள்.
  9. கிராமசபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் இயற்றுங்கள்.
  10.  .உங்களின் வரிப்பணத்தை உங்களின் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க கிராமசபைக்கு வாருங்கள். 
  11.  !!நேரலை!! கிராமசபை கூட்டத்தை முடிந்தவரை முகநூலில் நேரலையாக பரப்புவோம்.
  12. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் இயற்ற வாருங்கள்.
  13. ஆயிரகணக்கான மரங்களை  நட்டு இலட்சம் ரூபாய்கள்  வீணடிக்கப்பட்ட  மரங்களெல்லாம் எங்கே? என்று கேளுங்கள்.
  14. கிராமசபை கூட்டத்தில் போய் உட்காருவது! நமது கடமை.
  15. நல்ல பணித்தட பொறுப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம்.
  16. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
  17. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை  பன்மடங்கு ஆக்க வாருங்கள்.
  18. இலவச வீடு வேண்டுவோர் கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
  19. கேள்வி கேட்டால்தான் அரசுக்கு பொறுப்பு வரும் என்றால் அதற்கான சரியான தருணம்  கிராமசபை கூட்டம்.
  20. வண்ணக் கற்கள் சாலை  அமைப்பது குறித்து தீர்மானம் இயற்றுங்கள்,மே மாதத்தில் இயற்ற பட்ட தீர்மானம் எந்த அளவில் வேலை முடிந்துள்ளது என்று கேளுங்கள்.
  21. வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டும் போடாமல் தடுப்போம்.
  22. ரேசன் கார்டு,  பட்டா மாறுதல்,  வருவாய் துறை சார்ந்த வருமான,  இருப்பிட, சாதி சான்றுகளை,  பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்திலும் வழங்கும் கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.  ஏற்கனவே கிராம சேவை மையம் கட்டப்பட்டு இருந்தால் திறந்து வைத்து,  மக்கள் பயன்பாட்டிற்கு விட தீர்மானம் நிறைவேற்றுங்கள்.


இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும்.  

ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது

கிராமங்கள் முன்னேறாமல் இருக்க MP, MLA மட்டும் காரணமில்லை

கிராமங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களும் இளைஞர்களும் தான் காரணம்

உங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயன்டுத்தபடுகிறதா?

என்னென்ன பணிகள் நடைபெற்றது?

தரமான பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா ?

என்ற கேள்விகளை எழுப்புங்கள்

!! கிராமசபையில் அதிகாரம் மக்களுக்கே !!

No comments:

Post a Comment